மதியம் 1.36 மணியளவில் பொதுச்சுடரினை துலூஸ் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.கணேசலிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, லெப்.சங்கர் திருவுருவப்படத்துக்கு 01.11.2008 அன்று வடமராட்சி கடற்பரப்பில் இடம்பெற்ற கடற் சண்டையில் டோரா மற்றும் ஹூவர் படகை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமாகிய லெப்.கேணல் பதுமன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து துலூஸ் அல்பி மொந்தமான் போர்தோவை சேர்ந்த தமிழ் உறவுகள் பங்குபற்றி மாவீரர் திருவுருவப் படங்களுக்குப் பூக்கள் சொரிந்து, தீபம் ஏற்றி தமது உணர்வுகளைக் கண்ணீர் தாரைகளால் வெளிப்படுத்தினர். தொடர்ந்து துலூஸ் தமிழ்ச்சோலை பாடசாலை மாணவ மாணவிகளின் பேச்சு, பாடல், கவிதை, நடனம் மற்றும் இளைஞர் யுவதிகளும் கலை நிகழ்வுகள் மூலம் மாவீரர் தியாகம் போற்றினார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு மாவீரர் செய்தி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.