மதரஸா மாணவர்களின் உயிரிழப்பு ; ரிஷாட் விசனம்

20 0

காரைதீவு – மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த  சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் செவ்வாய்க்கிழமை (03)  சபையில் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அம்பாறை மாவட்டத்தில், மாவடிப்பள்ளியில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது வீடுகளுக்கு நான்  விஜயம் செய்திருந்தேன். அப்போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பட்டினாலேயே இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி விசனம் வெளியிட்டனர்.

குறிப்பாக, இந்த சம்பவம் இடம்பெற்ற போது, பொலிஸார் கடமையில் இருந்திருக்கிறார்கள். வெள்ளப் பாதிப்பினால், மதரஸாவிலிருந்து வெளியேறுவதற்கு வழி இல்லாததன் காரணமாகவே, மதரஸா நிர்வாகம் மாணவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி அனுப்பியிருக்கின்றது.

இவ்வாறு அவர்கள் அந்தப் பாதையில் பயணித்த போது, வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்திருந்த நிலையில், பொலிஸார் வீதியை மூடாமல், போக்குவரத்துக்கு அனுமதி அளித்தமையானது பொறுப்பற்ற செயற்பாடாகும். அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை விளக்கியிருக்க வேண்டும்.