ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மொஹமட் சாலி நளீம், சபாநாயகர் (கலாநிதி) அசோக சபுமல் ரன்வல முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு 87,038 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை வென்றது. இந்நிலையில், கட்சிக்கான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான ஒரு வெற்றிடத்துக்கு இவர் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளராக இருந்துள்ளார்