க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

19 0

2024 (2025) ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் இம்மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழியூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை  1911, 0112784208, 0112784537, 0112786616, 0112786200, 0112786201 மற்றும் 0112786202 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.