நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு.. மின் கட்டணம் குறையுமா

10 0

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நேற்றுமுன்தினம்  (01) நாட்டில் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% ஆன மின்சாரம் நீர் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.