விடுதலைப் புலிகள் மாவீரர் தின கொண்டாட்டங்களை பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஹர்ஷன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மாவீரர் தின கொண்டாட்டங்களை பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.
ஏனைய சந்தேக நபர்களில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர் நேற்று (01) யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அரசியல் செயற்பாட்டாளரான கெலும் ஜயசுமன மற்றும் ஜனித் சதுரங்க ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களாவர்.
அவர்களுள் கெலும் ஜயசுமணவின் நலன் விசாரிப்பதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், தொழில்முனைவோர் திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் இன்று (02) வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்தனர்.
இதன்போது, உரையாற்றிய திலித் ஜயவீர, தேவையற்ற வகையில் சமூக ஊடக பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இது மக்களின் கருத்து சுதந்திரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
‘எந்த அரசாங்கமாக இருந்தாலும் தமது கருத்துகளை வௌிப்படுத்தும் உரிமைக்கு வேலியிடுவதை எதிர்த்தவர்கள் நாம். தற்போதைய அரசாங்கம் தற்போது செய்யும் வேட்டையை எதிர்ப்பது எமது பொறுப்பு. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த தேவையற்ற வகையில் இவ்வாறு அழுத்தும் கொடுப்பது தொடர்பில் நான் மிகவும் வருந்துகிறேன். ஊடக சுதந்திரம் மீது, மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன்