வவுனியாவில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி ; ஒருவர் கைது

7 0

வவுனியா, இளமருதங்குளம் பகுதியில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றினால் இந்த வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கூடங்குளத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.