இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான உளவுத்துறை பரிமாற்றத்தை தொடர்ந்து இந்த இரண்டு படகுகளும் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
ஒரு படகில் சுமார் 400 கிலோ ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும், மற்றைய படகு உதவிக்காக சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய கடற்படையினர் கடந்த 29ஆம் திகதி இந்த மீனவர்களை இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கஜபாகு கப்பலில் சேர்த்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.