இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதி பின்னர் முச்சக்கரவண்டி மற்றும் மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி மற்றும் பஸ் ஆகியவற்றிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.