அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

6 0

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சனிக்கிழமை (30) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் பொல்காவலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 05 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.