பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நால்வரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் சேவையில் தம்மை நிரந்தரமாக இணைத்துக்கொள்ளுமாறு கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிலர் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க முற்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.