மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா தொம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் 28 வயதுடைய தேரரும், கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் தேரரும், பேராதனை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டால் ஒன்றின் உரிமையாளர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொம்பே பிரதேசத்தில் உள்ள விகாரையில் பணிபுரியும் தேரரின் தலைமையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருட்டு சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.