மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின்படி, டிசம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையின் திருத்தம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 3,690 ரூபாவாகவும் 05 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 1,482 ரூபாவாகவும் காணப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, டிசம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையின் திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.