சென்னை விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

347 0

201607280940363372_Chennai-airport-smuggling-Rs-60-lakh-foreign-money-seized_SECVPFசென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் பயணத்தை நிறுத்தி வைத்து அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

சென்னையை சேர்ந்த முகமது மற்றும் ஒருவரது சூட்கேசில் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணம் இருந்தது. 2 சூட்கேஸ்களிலும் ரகசிய அறை அமைத்து அவற்றை கடத்த முயன்றது தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.

பயணிகளின் உடமைகள் விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்பு மத்திய தொழிற்படையினர் அதனை சோதனை செய்வது வழக்கம். அவர்களை மீறி வெளிநாட்டு பணம் கடத்தி செல்லப்பட்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் விமான நிலைய ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? இந்த பணம் யாருடையது? யாருக்கு கடத்தப்படுகிறது என்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.