விவசாயி படுகொலை ; இளைஞன் கைது

8 0

வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா சேமமடு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அய்யம்பிள்ளை செல்வ நிரோஜன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கெப் வண்டியில் கும்பலொன்றுடன் வந்த சந்தேக நபர் வீட்டில் இருந்த விவசாயியை வாளால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மாடுகளை வளர்த்து வந்ததாகவும், அதன் உரிமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த 18 வயதுடையவர் எனவும் அவர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.