நள்ளிரவில் இடம்பெற்ற விபத்து

10 0

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதான வீதியில் ராஹூல சந்திக்கு அருகில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதுடன், காரில் பயணித்த மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் அக்குரஸ்ஸவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததால், சாரதியால் காரைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் வீதியின் ஓரத்தில் இருந்த மின்கம்பமும் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.