சஜித், ஜப்பானிய தூதுவரிடம் முன்வைத்த கோரிக்கை

14 0

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஜப்பானிய தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவைப் பேணுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்துள்ளார்.