கட்சியில் எதிர்ப்பை சமாளிக்க பிரேமலதாவுக்கு புதிய பதவி

342 0

201607281040513108_Premalatha-to-take-new-posting-in-DMDK-party-Vijayakanth_SECVPFதே.மு.தி.க. கட்சியில் நிர்வாகிகளின் எதிர்ப்பை சமாளிக்க பிரேமலதாவிற்கு புதிய பதவி வழங்க உள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தே.மு.தி.க.வில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட நிர்வாகிகளை தே.மு.தி.க. தலைவர் ‘களை’ எடுத்து வருகிறார்.தேர்தல் தோல்விக்கு பிரேமலதாவின் தவறான முடிவு தான் காரணம் என்று ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் விலகி சென்றதால் மற்றவர்களை தக்க வைத்து கொள்ள, கட்சி நடவடிக்கையில் இனி பிரேமலதா ஈடுபடமாட்டார் என்று விஜயகாந்த் உறுதியளித்ததாக தகவல் வெளியானது.

கட்சியை விட்டு யாரும் வெளியேற வேண்டாம். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து எந்த முடிவும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் புதிய திட்டத்தை வகுத்துள்ளார். மகளிர் அணி செயலாளராக இருக்கும் மனைவி பிரேமலதாவிற்கு கொள்கை பரப்பு செயலாளர் அல்லது முக்கியமான பொறுப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

புதிய பதவி பிரேமலதாவுக்கு கொடுக்கும் பட்சத்தில் எவ்வித எதிர்ப்பும் வரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஏற்கும் வகையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தன்னிச்சையாக முடிவு எடுத்து அறிவித்தார் என்று தொண்டர்கள் யாரும் கூறக்கூடாது என்பதற்காக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இதை ஒரு தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுக்கும் விஜயகாந்த் பிறப்பித்த உத்தரவையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதாவிற்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிவேற்றப்பட்டுள்ளது.

கட்சியில் நிலவும் பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரேமலதாவிற்கு முக்கியமான பதவி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு தலைமை வந்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் கட்சியை பலவினப்படுத்த நினைக்கும் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு சரியான பதிலடி கொடுக்க இந்த முடிவை கேப்டன் எடுத்துள்ளார் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.