ஹெட்டிபொல வயலில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம்!

12 0

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹல்மில்லவாவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.

மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக குளியாபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.