பொல்கஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் ஹொதெல்ல பகுதியில் பஸ்ஸொன்று பாதசாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 68 வயதுடைய மெட்டிகும்புர, பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த பஸ் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடந்த நபர் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
சடலம் பொல்கஹவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.