கதிர்காமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

9 0

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்ல கதிர்காமம் கொஹொம்பதிகான பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (30) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 39 வயதுடைய செல்ல கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த நபர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் உரிமையாளருடன் தகராறு செய்த சிலர், நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மோதலை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் கொலை செய்துவிட்டு, பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் கதிர்காமம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.