வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலதொட எல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவர் நேற்று சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 26, 32 மற்றும் 56 வயதுடைய வெலிமடை மற்றும் மஹியங்கனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க உபகரணங்கள் மற்றும் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெலிமடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.