திருகோணமலை – ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து விழுந்து 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் வான்எல பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
வான்எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் ஆய்வதற்காக மரத்தில் ஏறிய போது மரத்தின் கிளை உடைந்ததில் மரத்திலிருந்து சிறுமி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று (30) மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 12வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவ இடத்திற்கு கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம். எஸ். ஷாபி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதையடுத்து சிறுமியின் சடலத்தை சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும், சம்பவம் தொடர்பில் வான்எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.