இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு நிகராக தமது நிறுவனத்தின் எரிபொருள் விலைகளும் திருத்தப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விலை நிலவரம்
- ஒக்டேன் 92 ரக பெற்றோல் – 1 லீற்றர் 2 ரூபா குறைப்பு – புதிய விலை 309 ரூபா
- ஒக்டேன் 95 ரக பெற்றோல் – 1 லீற்றர் – விலையில் மாற்றமில்லை
- ஒட்டோ டீசல் – 1 லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிப்பு – புதிய விலை 286 ரூபா
- சுப்பர் டீசல் – 1 லீற்றர் – விலையில் மாற்றமில்லை
- மண்ணெண்ணெய் – 1 லீற்றர் 5 ரூபாவினால் அதிகரிப்பு – புதிய விலை 188 ரூபா