நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து வீழ்ந்தது!

13 0

நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான அரச மரமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (29) வீசிய பலத்த காற்றினால் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதமடைந்ததுடன் மதிலொன்றும் இடிந்து விழுந்துள்ளது. இருப்பினும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.