ஜனாதிபதியினது உத்தரவுக்கமைய, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரின் முகவரியிடப்பட்டு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதியிடப்பட்ட கடிதம் கடந்த 28ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது.