மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த இளைஞன் பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு காரணமாக இந்த பெண் இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பின்னர் முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் அதிகாரிகள் இளைஞனையும் பெண்ணையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த இளைஞன் வனப்பகுதி ஒன்றிற்கு சென்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.