நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம்

16 0
image

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான அலப்போவை நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

சிரியாவின் வடமேற்கில் நிலை கொண்டுள்ள  கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதலை மேற்கொண்டு அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

 

ஹயாட் டஹ்கிரிர் அல் ஷாம் என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பிலிருந்து இந்த வாரம் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகருக்குள் நுழைந்துள்ளனர் என துருக்கியின் செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நகரின் புறநகர் பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்பதாக பொதுமக்கள் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களிற்குள் கிளர்ச்சியாளர்கள் அலப்போவின் கிராமப்பகுதிகள் பலவற்றை கைப்பற்றியுள்ளதுடன் இராணுவதளமொன்றை கைப்பற்றி சிரிய இராணுவத்தின் டாங்கிகள் உட்பட பல ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.