இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கங்கள் பெறுமதி இழக்கின்றன – புட்டின்

320 0

Vladimir_Putin-6-e1450795195384ரஷ்ய வீரர்களின் பங்களிப்பு இல்லாமல், இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள் பெறுமதி இழந்துள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த 108 விளையாட்டு வீரர்களுக்கு இந்தமுறை ஒலிம்பிக் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து பாவனைக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ரஷ்யாவின் விளையாட்டு வீரர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார்.