அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாசேனகம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மஹாசேனகம பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிப பெண் ஆவார்.
இந்த வயோதிப பெண் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.