நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றுபவர் ஆவார்.
வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட கார் ஒன்று தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் கைப்பற்றப்பட்ட காரை, மீளப் பெற்றுக்கொள்வதற்கு இந்த பொலிஸ் பரிசோதகர் 2,70,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.