கல்கிரியாகமவில் யானை கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

11 0
கல்கிரியாகம இங்குருவெவ பிரதேசத்தில் நீண்ட தந்தங்கள் கொண்ட யானை மின்சாரம் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனத்தின் பிரதான முகாமையாளரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ பதில் நீதவான் கெமுனு திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த யானையின் பிரேத பரிசோதனையை கால்நடை வைத்தியர் சந்தன ரணசிங்க  மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 முதல் 50 வயது மதிக்கத்தக்க, 4 அடி 2 அங்குலம் உயரமுடைய தந்தங்கள் கொண்ட யானையே உயிரிழந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதால் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக யானைக்கு மரணம் நேரிட்டுள்ளதாக கால்நடை வைத்தியர் தெரிவித்தார்.