தேசிய மாவீரர் நாளான நவம்பர் 27 இல் பெல்சியத்தின் Antwerpen என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆரம்ப நிகழ்வு நண்பகல் 12.40 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின் தமிழீழத் தேசியத்தலைவரின் 2008 ஆண்டு மாவீர்ர் நாள் உரை ஒலிக்கவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மணியொலி எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின் பிரதான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. மாவீரர் நாள் நிகழ்வு
பி.ப 6.30 மணிக்கு தமிழீழத்தேசியக்கொடி கையேந்தலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற கோசப்பாடலுடன் தமிழரின் தாகம்
தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிறைவு செய்யப்பட்டது.
சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டமைக்கிணங்க, ஆரம்ப நிகழ்வு மற்றும் சுடரேற்றல் ஆகியவற்றோடு,எழிச்சி நிகழ்வுகளும் நடைபெற்றது. நிகழ்வுகளாக வில்லிசை,கவியரங்கம்,
மாவீரர் பாடல்கள்,நடனம்,கவிதை,பேச்சு என அனைத்தும் உணர்வோடு அமைந்திருந்தது. நிகழ்வுகள் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றிருந்ததுடன்,
இவ்வாண்டு நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வோடு கலந்து கொண்டிருந்தனர்.எமக்காய் உயிர்கொடுத்தோரை தங்கள் நெஞ்சங்களில் சுமந்து மாவீரர் செல்வங்களிற்கு விளக்கேற்றினார்.