2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டார்.
அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.