கொக்கரெல்லையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது !

10 0

குருணாகல், கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ பிரதேசத்தில், சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருநாகல் முகாமின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் , இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 58 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேகநபர்களிடம் இருந்து , 400 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை , கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொக்கரெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை  கொக்கரெல்ல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.