கோனகங்கார பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யால வனப் பகுதியின் வெலி ஆர பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனகங்கார பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒக்கம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்கார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.