முந்தலில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது !

11 0
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – புத்தளம் வீதியின் நவதன்குளம் பகுதியில் , கேரள கஞ்சா மற்றும் காருடன் இருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 38, 42 வயதுடைய மங்களஎலிய மற்றும் மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிலோ 83 கிராம் கேரள கஞ்சா மற்றும் அவர்கள் பயணித்த கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான,  மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.