இரத்தினபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,882 எலிக்காய்ச்சல் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, கிரியெல்ல, எலபாத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2023 இல், 1,400 பேர் இனம் காணப்பட்டிருந்த நிலையில், 2024 இல் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.