வவுனியா குடகச்சக்கொடி வயல்வெளியில் சுகயீனம் காரணமாக கீழே வீழ்ந்து கிடந்த யானை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த யானை நேற்று (28) மீட்கப்பட்டுள்ளது.
இந்த யானை எட்டு வயது மதிக்கத்தக்கது எனவும் மோசமான காலநிலை காரணமாக உணவு தேடிச் சென்ற வேளையில் வயல்களில் தவறி விழுந்துள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.