உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஸ்யா உக்கிரமான வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என உக்iரின் வலுசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் தாக்குதல் காரணமாக ஒருமில்லியனி;ற்கு மேற்பட்டவர்களிற்கான மின்சாரவிநியோகம் துண்டிக்க்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் மேற்கு விவிவ் பிராந்தியத்தில் 523000க்கும் அதிகமானவர்களிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைட்டோர்மிர்து நகரில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதேவேளை மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான நிலத்தடி பகுதிகளிற்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் அந்த பகுதிகளில்தஞ்சமடைந்துள்ளனர்.
உக்ரைனின் மேற்கில் உள்ள மூன்று பிராந்தியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என மேற்கு பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எட்டு பிராந்தியங்களில் நேற்றிரவு ரஸ்யாவின் ஏவுகணைகளை அவதானிக்க முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் தலைநகரி;ல் இரண்டு இடங்களில் ஏவுகணை சிதறல்களை காணமுடிந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பல ஏவுகணைகள் இடைமறித்து செயல்இழக்கச்செய்யப்பட்டன எனவும் தெரிவித்துள்ளனர்.