வடிகாலமைப்புகள் சீரின்மையே வெள்ள அனர்த்தத்திற்கு காரணம் – ரவிகரன் எம்.பி.

17 0
வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கிய, பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தொடர்ந்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்படவேண்டும்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல், நிவாரணங்கள் வழங்குதலுடன், தறப்பாள் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது  தெரிவித்திருந்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.