அம்பாறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் மதரஸா அதிபர் உள்ளிட்ட நால்வர் கைது

14 0

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்த  சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில்  விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நிந்தவூர் மதரஸா அதிபர்,  ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரென நால்வர் இன்று (28)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர்  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.