வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோவில் சீன உணவகம் ஒன்றில் வறுத்த தவளை கறியுடன் கூடிய பீட்சா குறித்த காட்சிகள் உள்ளன.
அங்குள்ள ஒரு உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த பீட்சாவின் நடுவே பொரித்த தவளை உள்ளது. அதில் அவித்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட முட்டை, தவளையின் கண்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
‘பீட்சாவுக்கு உரிய மரியாதையே போய்விட்டது’ உள்ளிட்ட கருத்துகளுடன் இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது