ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான போரை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இஸ்ரேலும் லெபனானும் இணங்கியுள்ளன என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தநிறுத்த உடன்பாடு எட்டப்படுவதற்கு அமெரிக்கா உதவியது என பைடன் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததும்,மோதல்கள் முடிவிற்குவரும் ,என தெரிவித்துள்ள பைடன் மோதல்களை முடிவிற்கு கொண்டுவரும் நிரந்தர யுத்த நிறுத்தம் போல உருவாக்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தின்கீழ் இஸ்ரேல் லெபனானில் இருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளும். அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பு லிட்டானி ஆற்றுப்பகுதியிலிருந்து தனது உறுப்பினர்களையும் ஆயுதங்களையும் விலக்கிக்கொள்ளும்.
லிட்டானி ஆறு லெபனான் இஸ்ரேல் எல்லையிலிருந்து 30கிலோமீற்றர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த பகுதியில் லெபனான் இராணுவத்தினர் நிலை கொள்ளவுள்ளனர்.
யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கான ஐந்து நாடுகள் குழுவிற்கு அமெரிக்கா தலைமை தாங்கும்,இந்த உடன்படிக்கையை ஹெஸ்புல்லா அமைப்பு மீறுவதாக கருதினால் அதன் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான கடிதத்தை அமெரிக்கா வழங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.