யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் மேதகு 70 மிகச்சிறப்பாக நடைபெற்றது.

309 0

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 70 ஆவது அகவை நிகழ்வு யேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந் நகரத்திலும் அதனை அண்டியுள்ள நகரத்திலும் உள்ள தமிழ்மக்கள் உரிமையுடன் ஒன்றுகூடி தன்னலமற்ற தம் தேசியத்தலைவனின் பிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடினார்கள்
அந் நிகழ்வில் அனைத்துலகத் தொடர்பகத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தினால் நாடுகள் வாரியாக நடாத்தப்பட்ட மேதகு 70 எனும் போட்டிநிகழ்வில் யேர்மனியிலிருந்து பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.