மத்திய கிழக்கு நாடான யேமனில் 17 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இவர்களுள் சுமார் 2 மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சிறுவர் உயிரிழப்புகள் அங்கு இடம்பெறுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இவ்வறான நிலையில், அவர்களுக்கு அவசர உதவிகளை வழங்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.