வட கிழக்கு நிர்வாக முடக்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு

258 0

வடக்கு, கிழக்கில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிர்வாக முடக்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிர்வாக முடக்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கின் ஏனைய அரசியல் கட்சிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளும், இந்த நிர்வாக முடக்கத்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், காணாமல்போனோர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 66 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இதனிடையே முல்;லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தங்களுடைய சொந்தக்காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் 57வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.