ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தினர் மூன்று பேரினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கம்பஹ மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த மூன்று பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் இதன்போது நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.