லெபனானில் பிள்ளைகளுடன் வசிக்கும் வெளிநாட்டு பணிப் பெண்கள் நாடுகடத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் இவ்வாறு 21 பேர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில், கணவனுடன் தங்கி இருந்து தொழில்புரியும் பெண்கள், பிள்ளைகளைக் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் நாடுகடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தகவல்களின்படி, லெபனானில் 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லெபனானில் தமது பிள்ளைகளுடன் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.