தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லத்தின் முன்னாயத்தப் பணிகள் கடுமையான இயற்கையின் சீற்றத்திற்கு மத்தியிலும் உணர்வோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. துயிலுமில்லத்திற்குச் செல்லும் பிரதான பாதைகள் பாரிய வெள்ளப்பெருக்கால் மூடப்பட்டுள்ளமையால், பொருட்கள் யாவும் படகுகள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. இரவுபகலாக விழித்திருந்து எமைக்காத்த மாவீரர்களின் வல்லமைத் துணையோடு, இடைவிடா முயற்சியாகத் தொண்டர்களும், ஏற்பாட்டாளர்களும் தமது பணிகளை செவ்வனே முன்னெடுத்து வருகின்றனர். தென்தமிழீழ மக்களது உணர்வுபூர்வமான பேராதரவோடு நாளைய சுடர்கள் பிரகாசிக்குமென உறுதியாக நம்புவோம்.
Video Player
00:00
00:00